இளம் தம்பதிகள் செய்த நெகிழ்ச்சியான செயல் ! பலரும் பாராட்டு

இலங்கையில் திருமணத்துக்காகச் சேமித்த 20 இலட்சம் ரூபா பணத்தில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டிக் கொடுத்த தம்பதி தொடர்பிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த இளைஞன் மக்கள் வங்கியிலும் அவரது காதலி ஆயுர்வேத வைத்தியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர். எனினும் ஒரு நாள் கொண்டாட்டத் துக்காக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து பணத்தை வீணடிப்பதற்குப் பதிலாக வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு உதவுவதற்கு இருவரும் தீர்மானித்தனர்.

அதற்கமைய கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுப்ப தற்கான நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளனர். தங்கள் திருமணத்துக்காகச் சேமித்த பணத்தைக் கொண்டு அவர்கள் இந்த வீட்டை நிர்மாணித்து குறித்த குடும்பத்தினரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை பலர் பல லட்சங்கள் செலவழித்து மிகவும் ஆடம்பரமாக திருமண நிகழ்வுகளையும் பிற நிகழ்வுகளையும் நடத்திவரும் நிலையில், குறித்த இளம் தம்பதியரின் செயலானது முன்னுதாரணமாக அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர்.