ரியூசன் வகுப்புகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் ரியூசன் வகுப்புகளை நடத்துவதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித் துள்ளது.

இதன்படி சுகாதார வழிகாட்டுதல்களின்படி 100 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களுடன் ரியூசன் வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கமல் பிரியங்கர தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்த போதிலும் தனது தொழிற்சங்கம் மற்றும் ரியூசன் வகுப்பு ஆசிரியர்கள் ஒன்லைன் மூலம் தொடர்ந்து கற்பித்து வருவதாகவும் மாணவர்களுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சாதாரண தர, உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைககுத் தோற்றும் மாணவர்களுக்கு கூடுதல் மணி நேரம் கற்பிக்கப்படவுள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1 லட்சம் ரியூசன் வகுப்பு ஆசிரியர்கள் இருப்பதாக அச்சங்கம் தெரிவிக்கிறது.