பண்டத்தரிப்பு பகுதியில் திடீரென நிலத்தில் வீழ்ந்து மரணமடைந்த நபர்!

யாழில் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் திடீரென வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் மாவட்டம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இரண்டாம் ஒழுங்கை ஆனைக்கோட்டை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

குறித்த முதியவர் காணி ஒன்றில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே திடீரென வீழுந்து உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த முதியவரின் சடலம் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு அங்கு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.