நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும் திகதி அறிவிப்பு

இலங்கையில்   கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுகின்ற திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி காலை 4.00 முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான   ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் இந்த தளர்வு சுகாதார கட்டுப்பாடுகளுடன் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள், ஒக்டோபர் மாதம்31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் அமுலில் இருக்குமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.