பாகற்காய் ஜூஸை தினமும் குடிப்பதனால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாங்க பார்க்கலாம்

பாகற்காய் கசப்புத் சுவை தன்மை கொண்டது. ஆனால் பாகற்காயில் விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எனவே தினமும் காலையில் பாகற்காயை ஜூஸ் செய்து ஒரு டம்ளர் குடித்து வந்தால், நம்மை தாக்கும் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் பெரும்பங்கு வகிக்கின்றது. எனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க வேண்டிய அவசியம் உள்ள நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் ஜூஸை அருந்துவது மிகவும் நன்மை அளிக்கும்.
  • பாகற்காய் ஜூஸை சீரான இடைவெளியில் குடித்து வருவது புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி கட்டி உருவாவதை நிறுத்துகிறது. மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் இதன் மூலம் கணிசமாக குறைகிறது.
  •  பாகற்காய் ஜூஸ் அருந்துவது எடை இழப்பிற்கு உதவுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. தவிர இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலினுள் இருக்கும் நச்சு தன்மையை குறைக்கின்றன, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • பாகற்காயில் காணப்படும் சக்திவாய்ந்த வைரஸ் தடுப்பு பண்புகள் கொடிய எச்.ஐ.வி.யின் அறிகுறிகளான வொயிட் ஸ்பாட் சின்ட்ரோம் மற்றும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் போன்ற வைரஸ் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.