இந்த செடியை வீட்டில் வளர்த்தால் செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரிக்குமாம்.. வாங்க என்னவென்று பார்ப்போம்

மல்லிகையின் எப்போதும் மணம் பரப்பி மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். காதலை உச்ச நிலைக்குத் தூண்டி விடக்கூடிய ஆற்றல் மல்லிகைக்கு உண்டு. மேலும், அது நம்முடைய மனதை இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

துளசியை வேறு எந்த தாவரத்துடனும் ஒப்பிட முடியாது. துளசியிலிருந்து வெளிவருகிற வாசனை பெண்களின் கருப்பையை வளமாக வைத்திருக்க உதவுகிறது. துளசி இலை முதல் வேர் வரையிலும் மருத்துவ குணங்களை கொண்டது. அதனாலேயே துளசியை நாம் புனிதமான தாவரமாகக் கருதுகிறோம்.

வாடாமல்லி இதில் வாசனை எதுவும் இருப்பதில்லை தான். ஆனாலும், அந்த செடி எப்போதும் வாடுவதில்லை. அதுபோலவே வீட்டிலும் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. பெரும்பாலும் வாடாமல்லியில் வாசனை இல்லாத காரணத்தால் நாம் வீடுகளில் அதை வளர்ப்பதில்லை.