முதல் முறையாக இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பெற்ற தாய்

இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று காலை குறித்த பெண் இந்த குழந்தைகளை பெற்றுள்ளார். பேராசிரியர் ரிடான் டயஸின் தலைமையில் இடம்பெற்ற சிஸேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.

இன்று அதிகாலை 12.16 – 12.18 காலப்பகுதியில் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது. மூன்று பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளுமே பிறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

31 வயதுடைய தாயும் 6 குழந்தைகளும் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் இரண்டாவது பிறந்த குழந்தை மாத்திரம் தற்போது வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குழந்தையின் பெற்றோர் கொழும்பை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.