தினமும் ஒரு துண்டு தேங்காயை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்

தேங்காயில் ஏராளமான நன்மைகளை அளிக்கக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன.

நாம் ஆரோக்கியம் என்று நினைக்கிற பழச்சாறுகளில் கூட கலப்படம் செய்ய முடியும். ஆனால் இளநீரில் கலப்படமே செய்ய முடியாது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.

அத்தகைய தேங்காயை தினசரி உணவிலும் அல்லது பச்சையாகவும் எடுத்துக் கொள்வதால் என்னென்ன மாதிரியான மருத்துவப் பயன்களைப் பெறலாம் என்பது குறித்து காண்போம்.

கொழுப்பு

தேங்காயில் நிறைய கொழுப்பு இருக்கிறது என்று சொல்வது உண்மை தான். ஆனால் கொழுப்பில் எல்.டி.எல்., மற்றும் எச்.டி.எல் என்னும் இரண்டு வகை உண்டு. அதில் தேங்காயைப் பொருத்தவரையில் உடலுக்கு நன்மை செய்கின்ற சீரான கொழுப்புச் சத்தே நிறைந்திருக்கிறது. குறிப்பாக பச்சையாக சாப்பிடும் போது உடலில் அது நல்ல கொழுப்பாகவே சேர்கிறது. ஆனால் தேங்காயை சமைக்கிறோம் என்று சூடு செய்கின்ற பொழுது, தேங்காயில் கொழுப்புச் சத்து அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

தேங்காயில் உள்ள கொழுப்பைத் தாண்டி, நம்முடைய உடலில் தேங்கியிருக்கின்ற கெட்ட கொழுப்புகள் மற்றும் உடலில் தேங்கியிருக்கும் அழுக்குகள், நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் தேங்காய்க்கு உண்டு. அதோடு நம்முடைய ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும் ஆற்றலும் தேங்காயில் இருக்கிறது.

கொதிக்க வைத்தால்

தேங்காயை சமையலில் சேர்க்கும் போது, குறிப்பாக குழம்பு வகைகளில் தேங்காயை அரைத்து கொதிக்க வைக்கிற பொழுது, அது சூடாகி உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்பாக மாறிவிடுகிறது. இதுவே பச்சையாக சாப்பிடும்பொழுது அதிலுள்ள முழு சத்தும் நமக்குக் கிடைக்கும். அதோடு உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பையும் எளிதாகப் பெற முடியும்.

இறப்பை மீட்டெடுக்கும் சக்தி

யாரேனும் இறக்கும் தருவாயில் இருந்தால் அவர்களுடைய வாயில் பசும்பால் ஊற்றுவார்கள். அவர்கள் அதை குடித்துக் கொண்டே இறக்கும் வழக்கமும் சடங்குபோலவே இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் இந்த பால் ஊற்றும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா? பழங்காலத்தில் பசும்பாலுக்கு பதிலாக தேங்காய்ப் பால் தான் ஊற்றுவார்கள். இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் வாயில் தேங்காய் ஊற்றி குடிக்கச் செய்தால் ஆயுள் நீட்டிக்குமாம். இறப்பையும் தடுக்கும் சக்தி தேங்காய்ப் பாலுக்கு உண்டு.

சருமம்

சருமத்துக்கு பளபளப்பைத் தரும். சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க தேங்காய் எண்ணெயும் தேங்காய்ப்பாலும் பயன்படுத்தலாம். அதேபோல கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு தேங்காய்க்கு உண்டு.