நீங்கள் நூடுல்ஸ் பிரியரா? இனி அடிக்கடி சாப்பிடாதீங்க ஆபத்தாம்.. வாங்க என்னவென்று பார்க்கலாம்

தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக நூடுல்ஸ் உள்ளது. முக்கியமாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

நூடுல்ஸ் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் குறைவு

பதப்படுத்தப்பட்ட உணவான நூடுல்ஸ் உடல் பருமனை உண்டாக்கும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீனும் குறைவு என்பதால், இது எடையைக் குறைக்க சிறந்த உணவுப் பொருள் அல்ல.

வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி

ஆய்வில், வாரத்திற்கு 2 முறை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, இதை சாப்பிடாமல் இருப்பவர்களை விட வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

கொழுப்புகள்

நூடுல்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அல்லது ட்ரான்ஸ் கொழுப்புக்கள் என கெட்ட கொழுப்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

டயட்

டயட்டில் இருப்பவர்கள் நூடுல்ஸை சேர்த்துக் கொண்டால், அந்த டயட்டையே தரமற்றதாக்கிவிடும். சத்துக்கள் இல்லாத நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும்.

புற்றுநோய் ஆபத்து

நூடுல்ஸ் எண்ணெயால் பதப்படுத்தப்படும் போது, ஏராளமான தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதனுள்ளே உற்பத்தியாகும். சமையல் ஸ்டார்ச் நிறைந்த நூடுல்ஸை உயர் வெப்பநிலையில் சூடேற்றும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் அக்ரைல்அமைடை உற்பத்தி செய்யும்.