நீண்ட நாள் திருமணத்தடையா உங்களுக்கு? இந்த கடவுளை இப்படி வழிபடுங்க! பலன் கிடைக்கும்

ராசியில் சூரிய சந்திரனுடன் ராகு கேது சேர்க்கை பெற்ற ஜாதகருக்கு இன்னல்களைத் தருகிறார்கள்.

2, 7, 8 இடங்களில் இருப்பதும் பாவக்கிரகங்களுடன் சோர்ந்து இருப்பதும் பாவக்கிரங்களால் பார்க்கப்படுவதும் நீசக்கிரகத்துடன் சோர்ந்து இருப்பதும் அந்த ஜாதகருக்குத் துன்பங்களை உண்டாக்கும்.

ஜாதகத்தில் 5ம் இடத்தில் இருந்தால் புத்திரதோஷமும் 8ம் இடத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷமும் 7ம் இடத்தில் இருந்தால் திருமணத்தடை சர்ப்ப தோஷம் என்றும் எல்லா கிரகங்களும் ராகு கேது பிடிக்குள் அகப்பட்டு இருந்தால் கால சர்ப்ப தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ராகுதோஷத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்
ராகுதோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு கடன் தொல்லை அதிகமாகும்.
தீய பெண்களுடன் நட்பு ஏற்பட்டு துன்பமடைவது வியாபாரத்தில் அவமானப்படுவது அதிக கஷ்டப்படுவது.


கனவில் நேரில் விஷப்பாம்புகளைப் பார்ப்பது பாம்புகளால் கடிக்கப்பட்டு துன்பத்தை அடைவது
செய்வினைக்கோளாறு உண்டாவது.
சாபங்களுக்கு ஆளாவது.
நீண்டநாள் திருமணத்தடை மற்றும் புத்திரதடை.
தொழில் வளர்ச்சி தடை