பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களில் பொது மக்களை ஏமாற்றி மோசடி!

பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயரில், போலி பேஸ்புக் கணக்குகள் உருவாக்கி தகவல் சேரிக்கும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தவிந்து கல்ஹார என்ற நபர் தான் புலனாய்வு பிரிவு அதிகாரி என அடையாளப்படுத்தி பல்வேறு நபர்களின் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் சேகரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த நபர் பாணந்துர பொலிஸ் அதிகாரி சமந்த வெதகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாமல் சீ பெரேரா, குச்சிவெளி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக வித்தானகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரின் பெயர்களில் பேஸ்புக் கணக்குகள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் ஊடக எட்மின் என தன்னை குறித்த நபர் அடையாளப்படுத்தி பல்வேறு நபர்களின் தகவல் சேகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் கிடைக்கும் நபர்களுக்கு அழைப்பேற்படுத்தி அவர்களிடம் பல்வேறு பொருட்களை பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

இந்த நபர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.