தூக்கி ஏறியும் புளியங்கொட்டையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? வாங்க பார்க்கலாம்

உணவு வகைகளில் புளிக்கு பெரும் பங்கு உண்டு என்றே சொல்லலாம். ஊறுகாய், சட்னி மட்டுமின்றி சில வகை பிரியாணிகளில் கூட புளி சுவைக்காக சேர்க்கப்படுகிறது.

 

100 கிராம் புளியில் கால்சியம் , இரும்புச் சத்து , விட்டமின் சி , விட்டமின் ஏ, பொட்டாசியம் , நியசின் , பாஸ்பரஸ் , மக்னீசியம் , நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பல்வேறு நன்மைகளைக் கொண்ட புளியைப் போல் புளியங் கொட்டையும் பல நன்மைகள் கொண்டது.

அந்தவகையில் புளியங்கொட்டையில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சிகரெட் மற்றும் குளிர் பானங்களை அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்கு பற்களில் கறை மற்றும் பிளேக் ஏற்படும். இதுபோன்ற சமயத்தில், புளியங்கொட்டையின் தூளை பேஸ்ட் உடன் கலந்து பல் துலக்கலாம். இதனால் பற்களின் கறைகள் நீங்குவதோடு, பற்களின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படும்.
  •  புளியங்கொட்டையின் சாறு வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும், அதிலும் குறிப்பாக அஜீரணத்தை குணப்படுத்தும். புளியங்கொட்டையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, செரிமானத்தை சீராகவும், மேம்படுத்த உதவுகிறது.
  •  புளியங்கொட்டை, உங்கள் சருமத்தை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், சிறுநீர் பாதை மற்றும் உணவுக்குழாய் நோய்த்தொற்றுகளை சரி செய்ய புளியங்கொட்டையின் சாறினை குடிக்கலாம்.
  •   தினமும் இரவில் தூங்கச் செல்லும்முன் வெதுவெதுப்பாக நீரில் புளியங்கொட்டையை வறுத்து பொடி செய்ததை ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
  •    புளியங்கொட்டையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்து உள்ளது. இதன் விளைவாக இதய பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த புளியங்கொட்டையைப் பயன்படுத்தலாம்.