உங்க கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் போகமாட்டீங்குதா? இதோ அதனை போக்க சூப்பர் டிப்ஸ்

பொதுவாக கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது.

முன்பு 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இவை அதிகமாக இருந்தது. தற்போது பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவருகிறது.

முகத்தில் அந்த இடம் மட்டும் கருப்பாக தெரியும். இது முக அழகினை கெடுத்து விடும். எனவே இதனை ஆரம்பத்திலே தவிர்ப்பது நல்லது.

தற்போது  கருவளையங்களைப் போக்கும் சில இயற்கை வழிகளைப் பார்ப்போம்.

  • குளிர்ந்த நீரில் நனைத்த துணியையும் கண்களுக்கு கீழே வைக்கலாம். இரண்டுமே ஒரே பலனைத் தரும். ஐஸ் கட்டிகளை கண்களுக்கு கீழே வைப்பது கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் கருவளையங்களை நீக்க உதவும்.
  • இரண்டு ப்ளாக் அல்லது க்ரீன் டீ பேக்குகளை சுடுநீரில் ஊற வைக்க வேண்டும்.  பின் அதை ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைக்க வேண்டும். * அதன் பின் அந்த டீ பேக்கை எடுத்து கண்களின் மேல் 10-15 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும்.
  • வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து, பின் அதை கண்களின் மேல் 15-20 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள உட்பொருட்கள், கண் வீக்கம் மற்றும் கருவளையங்களைப் போக்கும்.
  • ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவி சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களின் மேல் 20 நிமிடம் வைத்து எடுத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
  • கற்றாழையின் ஜெல்லை கண்களைச் சுற்றி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
  • பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையங்கள் மறைந்து கண்கள் பளிச்சென்று இருக்கும்.