60,000 பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி !

நாட்டில் பாடசாலைகளை திறக்கப்பட்டவுடன் 60,000 பட்டகாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள பட உள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பாடசாலைகள் எதிர்வரும் 21ம் திகதி தொடங்கப்படும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள், ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு கல்வி சேவைகள் மீள தொடங்கப்படும்.

அதேநேரம் ஒரு சிலர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவே தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.