வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 641 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவால் காரணமாக கடந்த இரு வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும கல்வி நடவடிக்கை இணைய வழியாக இடம்பெற்றுவந்தன. தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பாடசாலைகளை திறக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் (21) வியாழக்கிழமை 641 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கூறியுள்ளார்.

இதேவேளை 200ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 21ம் திகதி திறக்கப்படவுள்ளது. அதற்கான சகல பணிகளும் நிறைவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தொிவித்திருக்கின்றார்.