உங்களுக்கு முகப்பரு தொல்லையா இருக்கா? இதோ அதனை போக்க சூப்பர் டிப்ஸ்!

முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான். அதுவே பெண்களுக்கு, ஆண்களுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும்.

சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன.

அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். இதற்கான வீட்டு மருத்துவம் என்ன என்று தெளிவாக நாம் காண்போம்.

முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம். அப்படி உடனடியாக முகப்பருக்களை நீக்க, சில வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

  • வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.
  • அருகம்புல் சாறு, பன்னீர், பப்பாளி விழுது ஆகியவற்றை சற்று குழைத்து முகத்தில் தடவி உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமையை அகற்றுவதுடன், முகப்பருக்களையும் மறையச்செய்யும்.
  •  வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் பருக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்ப்புறம் தடவக்கூடாது.
  •  தேன் மெழுகையும், சர்க்கரையையும் சேர்த்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவி வர பருக்கள் விரைவில் மறைந்து முகம் பளபளக்கும்.
  • 4 துளசி இலை, சிறிதளவு வேப்பந்தளிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக அரைத்து அதை பருக்களின் மீது தடவி, 15 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் முகத்தை கழுவினால் சருமம் மிருதுவாகி பருக்களும் மறையும்.
  •  அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து கலக்கி இரவில் பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இம்முறையை கடைப்பிடித்தால் பருக்கள் அகன்று முகம் மிளிரும்.