மீண்டும் அதிகரித்தது இவற்றின் விலைகள்!

இலங்கையில் சமையல் எரிவாயு, பாலமா, கோதுமை மா விலை உயர்வை அடுத்து அதனை சார்ந்திருக்கும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் மீண்டும் உயர்ந்துள்ளன.

அதன்படி தேநீர் விலை 30 ரூபாவாகவும், பால் தேநீர் விலை 70 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை பனிஸ் விலை 50 ரூபா என்றும், முட்டை ரோல்ஸ் 65 ரூபா எனவும் விலை உயர்ந்துள்ளது.

அதேவேளை, மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160 ரூபாவாகவும், மீன்சாப்பாடு விலை 180 ரூபாவாகவும், கோழி இறைச்சி சாப்பாடு விலை 240 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

 

மேலும் பிரைட் ரய்ஸ் விலையும் 200 ரூபாவுக்கு மேல் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில் அதியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.