கொரோனா தொற்றிய மேலும் இருவர் பூரண குணமடைவு..!! வெளியேறியோரின் எண்ணிக்கை 16ஆக உயர்வு..!!

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றி சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் கொரோனா நிலைமை தொடர்பாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விபரங்களை வெளியிட்டுள்ளது.இவர்கள் அங்கொடை தொற்றுநோய் எதிர்ப்பு வைத்தியசாலை மற்றும் முல்லேரியா வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்தநிலையில் இன்று முற்பகல் 10 மணிவரை கொரோனா வைரஸ் தொற்றுடன் 122 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.104பேர் கொரோனா சந்தேகத்தின்பேரில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .