கொதிக்கும் தண்ணீரில்.. இதை 2 ஸ்பூன் சேர்த்து குடித்து பாருங்க! அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க

இந்த காலக்கட்டத்தில் மக்களிடையே உணவு முறையில் ஒரு கட்டுப்பாடே இல்லாமல் போய்விட்டது. இதனால் பலரும் உடல் எடை அதிகரித்து குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

உடல் எடையை குறைக்க அளவான உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். இதனால் சாப்பிடும் உணவில் அதிகளவு அக்கரை காட்ட வேண்டும். நமது உடலில் சரியான அளவு தண்ணீரின் பங்கு சரியான அளவு இருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம்.

குறிப்பாக தண்ணீருடன் சீரகம் சேர்த்து தினமும் குடித்து வந்தால் உடலுக்கு பலவகை ஆரோக்கியம் அளிக்கிறது. சரி வாங்க தண்ணீரில் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

தயாரிப்பு முறை:-

இந்த பானத்தை தயாரிக்க பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டு பொருட்கள் தேவை. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதன் பிறகு 1-2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். அதன் பிறகு சூடாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை ஈசியாக குறையும்.

நன்மைகள்:-

  • பெருஞ்சீரகம் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. பசியின்மை, எடை குறைப்பு ஆகியவற்றிக்கு பெரிதும் உதவுகிறது. பெண்களுக்கு நீர் குடலை சுத்தம் செய்வதற்கான ஒரு சிகிச்சை பொருளாக உதவுகிறது.
  • பெருஞ்சீரக விதைகள் நார்ச்சத்து நிறைந்த மூலிகை பொருளாகும். பெருஞ்சீரக நீர் காலையில் பசியை கட்டுப்படுத்தி இயற்கையாகவே வயிறு நிரம்பியதாக உணர்கிறது. இதனால் உங்களுக்கு பசியின்மை குறைவாக இருக்கும்.
  • பெருஞ்சீரகம் ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்பட்டு வருவதால் உணவுக்குப் பிறகு அதனை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும் உடல் செரிமானத்தை எளிதாக்குவதற்கும் பெருஞ்சீரக நீர் சிறப்பாக செயல்படுகிறது.
  • சீரகம் கலந்த நீரை குடிப்பதன் மூலம் உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது. இதனால் தேவையில்லாமல் அதிகரித்த உடல் எடையை குறைய செய்கின்றது.