மாசெச்சூட்ஸில் பகுதியில் இரண்டு தலை, ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆமை

மாசெச்சூட்ஸில் பகுதியில் இரண்டு தலைகளைக் கொண்ட அதிசய அமை ஒன்று பிறந்துள்ளது.

 

அமெரிக்காவின் மாசெச்சூட்ஸில் இரண்டு ஆமைகள் ஒட்டிப்பிறந்துள்ளது. அவை இரண்டு தலைகளும் ஆறு கால்களையும் கொண்டுள்ளன. இரண்டு ஆமைகளுக்கான உடல் உறுப்புக்கள் தனியே இருந்தாலும் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் இவை பின்னிப்பிணைத்துள்ளன.

இந்த டைமண்ட் பேக் கடல் ஆமை மாசெச்சூட்ஸில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பிறந்துள்ளது. இந்த ஒட்டிப்பிறந்த ஆமைகள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும். இவை நீண்ட காலம் வாழுவதற்கான உத்திரவாதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.