முதியவர் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட மோதலில் முதியவர் பலி!

எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட பகுதியில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீன்பிடி அலுவலக தோட்டத்திற்கு முதியவர் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட மோதலின்போதும் ஒருவர் மற்றொருவரை தள்ளும்போது சிறிய நீரோடை ஒன்றில் விழுந்த 71 வயது முதியவர் தலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் 71 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர் மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.