பேருந்து ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தனியார் பேருந்து துறையைப் புதுப்பிக்க போக்குவரத்து அமைச்சு நிவாரணப் பொதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, ஒவ்வொரு பேருந்து உரிமையாளருக்கும் ரூ .100,000 பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

குறித்த நிவாரணப் பொதிகளை வழங்க பேருந்துத் துறையில் ஈடுபட்டுள்ள 06 தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிவாரணப் பொதிகளின் கீழ் போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளுக்கான டயர்கள், பற்றரிகள், மசகு எண்ணெய் மற்றும் உதிரிப் பாகங்களுக்கு விஷேட கழிவை வழங்க தனியார் நிறுவனங்கள் தேசிய போக்குவரத்து சேவைகள் ஆணைக்குழுவுடன் உடன்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.