உங்க வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்க வேண்டுமா? வாங்க என்னவென்று பார்ப்போம்

பொதுவாக ஒருவரது மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலம் சிறப்பாக இருந்தால், அது உடல் எடையைக் குறைக்கும் நோக்கத்தை எளிதில் அடைய உதவும்.

இதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை பானங்களை  குடித்தாலே போதும்.

எனவே நீங்கள் உங்களின் அதிகப்படியான எடை மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்க நினைத்தால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களை அன்றாடம் குடித்து வாருங்கள்.

அந்தவகையில் தற்போது கெட்ட கொழுப்பை கரைக்க என்ன மாதிரியான பானங்களை எடுத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.

  • வெட்டிவேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, நரம்பு தளர்வு , தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க உதவும். மேலும் இது சருமத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
  • மல்லி விதையை இரவு தூங்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, இரவு முழுவதும் நீரில் வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நிச்சயம் காணலாம்.
  •    சீரக விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பானதும் எலுமிச்சை சாறு பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  •   காலையில் எழுந்ததும் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.
  •  வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை நீருடன் சாப்பிட வேண்டும். இதனால் உடல் சூடு குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களும் கரையும்.
  •   சுடுநீரில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை மற்றும் தொப்பை வேகமாக குறைவதைக் காணலாம்.