உங்களுக்கு அடிக்கடி விக்கல் வருதா? அப்போ இந்த நோயின் அறிகுறிகளாக கூட இருக்குமாம்! உஷாரா இருங்க

பொதுவாக விக்கல்கள் அதிக நேரம் நீடிக்காது. விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் போது, அவை சிக்கலானது. ஏனெனில் நாள்பட்ட விக்கல் பல நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

நாள்பட்ட விக்கல்கள் அடிப்படை உடல் நலப் பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும் எனவே விக்கலை சாதாரணமாக எடுத்துக் கொண்டு புறக்கணிக்கக் கூடாது.

உங்கள் நாள்பட்ட விக்கல்களுக்கு எது காரணமாக இருக்கக்கூடும் என்பதை மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இது பல நோய்களை ஏற்படுத்தக்கூடியதாக கூட இருக்கும்.

அந்தவகையில் நாள்பட்ட விக்கல் எந்தெந்த நோயின் அறிகுறிகள் இருக்கலாம் என்று பார்ப்போம்.

  • உதரவிதானத்தில் உள்ள வேகஸ் அல்லது பிரெனிக் நரம்புகளில் ஏதேனும் எரிச்சலோ அல்லது சேதமோ ஏற்பட்டால் விக்கல் ஏற்படும். இந்த நரம்புகள் உதரவிதானத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் உங்கள் நரம்புகளில் விக்கல் மற்றும் எரிச்சலுக்கு வழி வகுக்கும். இதனால் உங்களுக்கு கழுத்து நரம்பில் ஏற்படும் பிரச்சனையால் கட்டிகள் ஏற்படும்.
  •   நரம்பு மண்டலத்தை பாதிக்கும் எந்தவொரு தொற்று அல்லது பிரச்சனையும் நம் நாள்பட்ட விக்கல்களில் பிரதிபலிக்கக் கூடும். மூளை சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதால் கூட விக்கல் ஏற்படலாம்.
  • மல்டிபிள் ஸ்களீரோசிஸ், மூளை காயம், என்செபலிடிஸ் மற்றும் மூளைக் காய்ச்சல், பக்கவாதம், மூளைக் கட்டிகள், மற்றும் முதுகெலும்பு காயங்களால் கூட தொடர் விக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • நமது வயிறு, குடல், கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான பிரச்சனை கூட விக்கல் ஏற்படுவதற்கு காரணமாகும்.
  •  நம் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனை குறிப்பாக இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளால் கூட விக்கல் ஏற்படும். அதேபோல் விக்கல்களை ஏற்படுத்தும் சில நோய்கள் உள்ளன. வயிற்றுப் புண், மஞ்சள் காமாலை, காலரா, குடல் அழற்சி, நாட்பட்ட நோய்களால் கூட விக்கல் வரும்.
  •  நாம் சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் கூட நமக்கு விக்கல் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
  •  விக்கலை ஏற்படுத்தும் பகுதிகளில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகள், நரம்பு மண்டலம், மூளை, இரைப்பை குடல் பகுதிகள் அல்லது உதரவிதானம் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் கூட விக்களைத் தூண்டும்.
  •  இருதய பிரச்சனைகள், மாரடைப்பு மற்றும் வீக்கம் போன்ற விளைவுகளாகவும் விக்கல் ஏற்படலாம். இவை மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளாக செயல்படலாம். இதுமட்டுமின்றி, நாள்பட்ட விக்கல்களுக்கு புற்று நோய் கூட அடிப்படை காரணமாக இருக்கக் கூடும்.
  •  பதட்டம் அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் மன உளைச்சல் கூட விக்கல் ஏற்பட காரணமாகலாம். உங்கள் நாள்பட்ட விக்கல்களுக்கு எது காரணமாக இருக்கக்கூடும் என்பதை மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.