பால், முட்டையின் விலைகளும் அதிகரிக்குமா? மக்கள் அவதி!

இலங்கையில் பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் இன்று அல்லது நாளை உயரும் என துறைசார் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் (D. B. Herath) தெரிவித்துள்ளார்.

திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும், திரவ பாலின் விலையை சந்தையில் உள்ள பால் விலையுடன் ஒப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய உள்ளூர் பால் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளமையினால் மில்கோ நிறுவனம் திரவப் பாலின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.