தினமும் 2 டம்ளர் மிளகுத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்

மிளகு நம் தினசரி உணவில் பயன்படுத்தபடும் ஒரு மசாலா பொருள் ஆகும். இது சித்தமருத்துவம் முதல் இன்று வரை மருத்துவ பயன்பாட்டில் அதிகம் உள்ளது.

ஒரு சிறு மணியளவு தோற்றம் கொண்ட மிளகு வெப்பம் மற்றும் காரமான சுவை கொண்டது. மிளகு எண்ணற்ற ஊட்டசத்துக்கள் மற்றும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்-சி , வைட்டமின் கே, மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஒரு சிறு மிளகில் அடங்கி உள்ளது.

இந்த மிளகை தினமும் சமையலில் சேர்த்து வந்தால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதிலும் மிளகைப் பொடி செய்து நீரில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால், நம் உடலில் பல அதிசயக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் 1-2 ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.

அந்தவகையில் இப்படி மிளகு தண்ணீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பொதுவாக கோடையில் அதிகமாக வியர்வை வெளியேறுவதன் மூலம், உடலின் ஆற்றல் குறையும். ஆனால் இந்த மிளகு நீரைக் குடிப்பதால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும்.
  • கோடைக்காலத்தில் மலச்சிக்கலால் சிலர் அவஸ்தைப்படுவார்கள் மிளகு நீரை தினமும் இரு வேளைப் பருக வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக இருக்கும்.
  •  வெயில் காலத்தில் உடல் வறட்சியடையக்கூடும். இதற்கு மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம்.
  •   கோடைக்காலத்தில் எடையைக் குறைக்க மிளகு நீர் மிகவும் உதவியாக இருக்கும். மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, குறைந்த காலத்தில் அதிக கலோரிகளை வேகமாக கரைக்க உதவும்.
  •  மிளகு நீரை ஒருவர் தினமும் 2 வேளை பருகினால், பசியைக் கட்டுப்படுத்தி, உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும்.
  •  எலும்பு பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பது, எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.
  • மிளகு நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே ஆரோக்கியமாக வாழ இந்த மிளகு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.