திருமணத்திற்கு பின் மணமகளை வலது கால் எடுத்து வைத்து வீட்டுக்குள் அழைப்பது ஏன்? ஆன்மீகம் கூறும் சுவாரஷ்ய தகவல்

புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகின்ற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்கிறோம். எதற்காக அப்படி சொல்கிறோம் என்பதை காணலாம்.

புதிய வீட்டுக்கு செல்லும் போது வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்கிறோம். நம் முன்னோர்கள் வலதுக்கு மிக அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

வலது பக்கம் திரும்பி எழ வேண்டும், வலது கால் வைத்து நுழைய வேண்டும். வலது கையால் உணவருந்த வேண்டும் இவ்வாறு வலதுக்கு மிக முக்கியத்துவம் இருந்து வருகின்றது.

இடது கையால் தண்ணீர் குடிக்கும் குழந்தைகளை கண்டிப்பதுண்டு. வலது பக்கத்தால் செய்யப்படும் செயல்களும் வெற்றிபெறும் என்ற எண்ணமும் மனதில் கொண்டிருக்கிறோம்.

ஒரு நபர் வலது காலை அழுத்தி மிதித்து நடக்கும் போதே அவர் வெற்றியின் பாதையில் செல்கின்றார் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆன்மிகமாக சிந்தித்துப் பார்த்தாலும் வலது சக்திக்கு தனிப்பட்ட வருணை இருப்பதை காணலாம்.

ஒரு மனிதனை சோதனை செய்து பார்க்கும் போது, அவனது வலது பாகத்து முக்கிய நரம்புகளின் செயல்பாடுகள் அவனை கூடுதல் கடமைகளைச் செய்ய வல்லவனாகக்குகின்றன.

அதாவது வலது பாகத்தால் திறமையுடன் செயல்படலாம் என்று பொருள். மனநிலையும் வலது பாகத்தை சார்ந்திருக்கின்றது. வலது கால் வைத்து பிரவேசித்து, அதேபோல் வெளியேறுவதும் சுபலட்சனம் என்று கருதுகின்றோம்.

நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன.

நீயும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள்.