யாழ் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஓமந்தை பகுதிக்கான மின் தடை பட்டதால் மக்கள் அவதி!

வவுனியாவில் ஏ 9 வீதியில் மாணிக்கவளவு சந்திப்பகுதியில் யாழ்ப்பாணம் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஓமந்தை பகுதிக்கான மின் தடைப்பட்டு மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனம் மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டதுடன் வாகனம் சேதமடைந்த நிலையில் , விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இவ் விபத்தினால் மின் கம்பம் உடைந்து வீழ்ந்ததனால் ஓமந்தை பகுதியின் சில கிராமங்களுக்கான மின்சாரம் 3 மணியில் இருந்து தடைப்பட்டுள்ளது.