திங்கட்கிழமை முதல் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் யாவும் ஆரம்பம்…!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் அலுவலங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களை மாத்திரம் அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பல்கலைக்கழங்களின் அலுவலகங்கள் மற்றும் ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இதனிடையே, எதிர்வரும் 11 ஆம் திகதி அரச பாடசாலைகளை திறப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய பாடசாலைகளை திறப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் கல்வியமைச்சு கூறியுள்ளது.