எரிபொருள் விலையில் மாற்றம் ?

நிதியமைச்சிடம் இருந்து எதிர்பார்க்கின்ற விலைச் சலுகை கிடைக்காத பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 15 ரூபாவினாலும், டீசலின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த கோரிக்கைகள் தொடர்பில், தற்போது ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.