யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு இடமா ! பலரும் பாராட்டு

இது ஓர் உயர்தர சுற்றுலா விடுதியோ, விருந்தினர் இல்லமோ அல்லது ஓர் உணவகமோ அல்ல. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையிலுள்ள ‘ஓர் சிறுவர் பராமரிப்பு இல்லத்திலுள்ள’ உணவுநேர காட்சி.
மிகநீண்டகாலமாக நமது புழக்கத்திலிருந்து, மேல்நாட்டு நாகரிக ஆதிக்கத்தினால் காணாமலாக்கப்பட்ட நமது மட்பாண்டங்களில் தயாரிக்கப்பட்டு, பரிமாறப்படுகின்ற உணவுகளேயாகும். சிரமம் கருதாமல், பராமரிப்பு வேலைகளையும் பொருட்படுத்தாது தம்மால் முடிந்தளவு இத்தகைய மட்பாண்ட பொருட்களில் உணவுப்பதார்த்தங்களை அனைவரதும் ஆரோக்கியத்தில் அக்கறைகொண்டு பரிமாறி முன்னுதாரணமாக செயற்படும் குறித்த சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.
மேலும் உணவுப்பண்டங்களை மிகநேர்த்தியாக, ஓர் ஒழுங்குவரிசையில் சுயபரிமாறுதல் (Self Serve) முறையில் கையாள்வதற்கேற்ப அழகாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளமை ஓர் கலைநயமிக்க ஒழுங்கமைப்பு. சுத்தமான தளவாடங்களில், உணவு சுகாதாரம் (Food Hygine), உணவு பாதுகாப்பு (Food Safety) முறைகளுக்கு அதிக முக்கியத்துவமளித்து சேவையாற்றும் விதம் சிறப்பானது.
நமது பிரதேசத்தின் பல உணவக உரிமையாளர்கள், உணவு கையாளும் நிலையங்கள் மட்டுமன்றி சில சுற்றுலா விடுதி உணவகம் நடத்தும் பணியாளர்களை இங்கு அழைத்துச்சென்று பயிற்சியளித்தல் சாலச்சிறந்தது.
இவ்வாறான நமது மட்பாண்டங்களை மீண்டும் பாவனைப்படுத்த விளைதல், பல ஆரோக்கிய பிரதிபலன்களை உருவாக்குவது மட்டுமன்றி, மட்பாண்ட தொழில் முனைவோர் பலர் நன்மையடைவர்.

Thanks : Athmananthan Vimalraj