அதிகரிக்கப்படலாம் பெரிய வெங்காயத்தின் விலை! நெருக்கடியில் மக்கள்

நாட்டில் பல அதியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் , தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று பெரிய வெங்காயத்தின் கிலோ விலை 150 ரூபா வரை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக 40 ரூபா வரி விதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு இறக்குமதி வெங்காயத்தின் மீதான வரி தாக்கம் உள்நாட்டு வெங்காயத்தின் கேள்வியை அதிகளவில் அதிகரிக்கச் செய்ததினால் விலையும் உயர்ந்துள்ளது.

இந்நிலை மேலும் தொடருமானால் இன்னும் ஒருவாரத்தில் நாட்டில் வெங்காயத்தின் விலை 200 ரூபா வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.