அஸ்வினி நட்ச்சத்திர காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்

சனி பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். செவ்வாய் – கேது அம்சத்தில் பிறந்திருக்கும் நீங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு காரியங்களை செய்பவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூர்யமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன் – மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.

கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு: அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு: எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும். நீண்ட நாள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள்.

பெண்களுக்கு: எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
சிறப்பு பரிகாரம்: அறுகம்புல்லை அருகிலிருக்கும் வினாயகர் ஆலயத்திற்கு சமர்ப்பித்து வணங்கி வருவதன் மூலம் குடும்பம் சுபிட்சம் பெறும்.

செல்ல வேண்டிய திருத்தலம்: கும்பகோணம் – சுவாமிமலை சென்று வழிபாடு செய்து வந்தால் நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் – குரு – சுக்கிரன்.