மாமனாரின் கையை வெட்டி துண்டாக்கிய மருமகன்! கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணி தகராறு காரணமாக தனது மாமனாரின் கையை வெட்டித் துண்டாக்கிய மருமகனான ஆலய பூசகர், கையை வாய்க்காலுக்குள் எறிந்துள்ளார்.

கை துண்டாடப்பட்ட நிலையில் 57 வயதான முதியவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.