இலங்கையில் மேலும் 09 பேருக்கு கொரோனா.!! மொத்த எண்ணிக்கை 844 ஆக உயர்வு..!!

மேலும் 09 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்றும் மொத்த நோயாளிகளில் 413 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட 844 பேரில் இதுவரை 580 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 255 பேர் குணமடைந்துள்ளதுடன் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.