இலங்கையில் மேலும் 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 527,064 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளாகி இன்று வெளிவந்த அறிக்கையின் படி, நேற்று(10) மேலும் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,354 ஆக அதிகரித்துள்ளது.