இலங்கை வந்த 05 மணிநேரத்தில் நாடு திரும்பிய சுற்றுலாப் பயணி!

இலங்கைக்கு வந்த 05 மணிநேரத்தில் மீண்டும் அமெரிக்கா திரும்பிய சுற்றுலாப் பயணி தொடர்பில் அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜோச்ஜ் என்ற குறித்த சுற்றுலாப் பயணி, கடந்த 07ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக இலங்கைக்குப் பிரவேசித்த நிலையில், அடுத்த 05 மணிநேரத்தில் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.

இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில்,

இலங்கை வந்ததும் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து பிரச்சினை இருந்தமை மற்றும் தன்னுடன் தொடர்புகொண்ட சுற்றுலாப் பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியாமற் போனமை போன்ற காரணங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இதனை அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.