மகர ராசி குழந்தைகள் எப்படிப்பட்டவங்க தெரியுமா? வாங்க பார்க்கலாம்

மகர ராசியில் பிறந்த குழந்தைகள் நல்ல புத்திசாலிகளாகவும் ஒழுக்கமுடையவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் சமுகத்தில் விளங்குவார்கள்.

மகரம் ராசி மண்டலத்தில் 10வது ராசியாகும். இது ஒரு பெண் ராசி. சர ராசி. பஞ்சபூத தத்துவங்களில் இது நில ராசியாகும், அதனால் இது பூமி ராசி என்றும் அழைக்கப்படும். இதன் அதிபதி சனி. இந்த ராசியை ஆங்கிலத்தில் கேப்ரிகான் என்று அழைப்பர்.

வானமண்டலத்தில் 10வது ராசியாக மகரம் வருவதால் இதை உச்சராசி என்று அழைப்பர். மேலும் இதை பெபண் ராசி என்றும் அழைப்பர். மேலும் இதை இரட்டை ராசி என்றும் அழைப்பார்கள்.

இந்த ராசியில் உத்திராட நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் திருவோண நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் அவிட்ட நட்சத்திரத்தின் 1,2 பாதங்களும் அடங்கியுள்ளன. உடலிலுள்ள எலும்புகள், முழங்கால் மூட்டுகள் இவற்றையெல்லாம் குறிக்கிறது.

இந்த ராசி சனியின் சொந்த வீடாக வருவதால் சனி பகவான் இந்த ராசியில் ஆட்சியாகவும் இந்த ராசியில் சகோதரகாரனும் பூமிகாரகனுமாகிய செவ்வாய் பகவான் உச்சமாகவும் குழந்தைக்குக் காரனுமாகிய குருபகவான் இந்த ராசியில் நீசமடைகிறார். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது எதிரியின் வீடு. ஆனால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் இது நண்பனின் வீடு.

அழகானவர்கள்
சனிபகவான் ராசியில் பிறந்த நீங்கள் ஓரளவு நல்ல அழகுடன் விளங்குவீர்கள். ஆரம்பத்தில் மிகவும் மெலிந்தும் இணைத்தும் காணப்படும். உயரமானவர்கள், உடல், மார்பில் மெல்லிய முடியிருக்கும். பெரிய தலை, அகன்ற முகம், தெளிவான கூரிய மூக்கு, சற்று வளைந்த கூனல் முதுகு. கை, கால்கள் நீண்டிருக்கும். வயது ஏற ஏற நன்கு அழகுடனும் கவர்ச்சியுடனும் வளர ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் பிறரை வசீகரிக்கக் கூடிய உருவ அமைப்பைப் பெற்று விளங்குவீர்கள்.

விடாமுயற்சி கொண்டவர்கள்
சற்று கூச்சம் சுபாவம் உடையவர்களாக இருப்பீர்கள். சற்று பயந்த சுபாவம் உடையவர்களாகவும் இருப்பீர்கள். நிலம் ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்த நீங்கள் பொறுமைசாலிகள். மகிழ்ச்சியுடன் வாழ நினைப்பார்கள் நம்பிக்கையானவர்கள். ஒழுக்கம் உடையவர்கள், விடாமுயற்சி, உறுதியான மனநிலை, கடின உழைப்பாளிகள், எப்பொழுதும் எதிர்கால சிந்தனை உடையவர்கள். சேவை மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பீர்கள்.

சில சமயம் சோம்பேறி
பல கலைகளிலும் திறமை உடைய நீங்கள், உங்களுக்கு தேவை என்று கருதும் ஒரு பொருளை எப்பாடு பட்டாவது அடைந்து விடுவீர்கள். கஷ்டப்பட்டே வாழ்வில் முன்னேறுவீர்கள். ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஏற்படும் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள்.சனி என்றல் சோம்பேறி என்ற அர்த்தமும் உண்டு. ஒரு சிலர் எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்யமாட்டார்கள். சில நேரங்களில் சிந்திக்காது எதையாவது பேசி தன்னையும், தன்னை சுற்றி இருப்பவர்களையும் மனவருத்தப்படும்படி செய்து விடுவார்கள்.

உயர்பதவி வகிப்பார்கள்
கட்டிடக்கலைஞர்கள், பொறியியலாளர்கள், சிற்பி, வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உயர்ந்த பதவிகள் வகிப்பார்கள். குடிசைத்தொழில் செய்தாலும் சிறந்த நிர்வாகத்திறன் உடையவர்களாக இருப்பார்கள். 6 ஆம் பாவம் புதன் வீடாக வருவதால் தகவல் தொடர்பு, போக்குவரத்து வண்டி வாகனங்கள் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

திரைப்படத்துறையில் பணி
மகரம் ராசிக்கு 10வது ராசியாக சுக்கிரன் வருவதால் அரசு சார்ந்த துறைகளில் வேலைபார்க்கும் வாய்ப்புகள் அமையும். பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். சினிமா, இசை, கதை, கவிதை, இவற்றில் ஆர்வம் உடையவராக விளங்கச் செய்து அதில் ஈடுபட வைப்பார். மத்திம வயதுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். பணமும், புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள். கணிதம், மருத்துவர்கள். பொறியாளர்களாகவும் விளங்க வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலர் ஜாதக அமைப்பைப் பொறுத்து இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு யோகா, தியானம், போன்ற கலைகளில் ஈடுபட்டு சிறந்த ஞானி அல்லது யோகி ஆகிவிடுவார்கள்.

பாசமான குடும்பம்
குழந்தைகளாக இருந்தாலும் எதிர்காலத்தில் திருமண வாழ்க்கை எப்படி அமையுமே என்று பெற்றோர்கள் கவலைப்படுவார்கள். அந்த கவலை வேண்டாம். இவர்களது ராசிக்கு 7வது ராசி கடகம் ராசி. சந்திரனின் விடாக வருவதால் மணவாழ்வு ஓரளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.வரும் கணவன், மனைவி அழகுள்ளவர்களாகவும் இளமையானவர்களாகவும் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் நல்ல யோகமும் நன்மைகளும் உண்டு. குழந்தைகள் உண்மையாகவும் பாசத்துடனும் விளங்குவார்கள்.

தோல்நோய்கள் ஏற்படும்
10வது ராசியாக சனி வீடாக வருவதால் சனி உங்களுக்கு கால்களில் பாதிப்பு அதிகம் வரும்,தொடை, முட்டி, கணுக்கால், பாதங்கள் இவற்றில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சளித்தொல்லைகள் ஏற்படும். மேலும் சனி எலும்பைக் குறிப்பதால் எலும்பு,தோல் வியாதிகள் மற்றும் உடலில் அலர்ஜி அரிப்பு,வலிப்பு,வாயு தொல்லைகள் ஏற்படும். மேலும் உடலில் நுரையீரலில் சளித்தொல்லைகள் அஸ்த்துமா போன்ற வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 6ம் வீடு மிதுனம் வீட்டதிபதி புதனாக வருவதால் உடலில் காது, நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்பட்டு விலகும் எனவே குட்டீஸ் எச்சரிக்கை அவசியம்.