கிரிக்கெட் விளையாடிய ஜனாதிபதி கோட்டாபய: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

ஜனாதிபதி கோட்டாபய கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் சமூக வைலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் விசேட நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்ததுடன், அங்கு கிரிக்கெட் விளையாட்டிலும் ஈடுபட்டார்.

இதன்போது இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திஸர பெரேராவின் பந்துக்கு ஜனாதிபதி உற்சாகமாக முகம் கொடுத்தமையானது, தற்போது சமூக வளைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும், அதில் உரையாற்றிய ஜனாதிபதி, ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற கொள்கைக்குள் மோசடிகள் அற்று சரியான முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.