இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை குறைந்த விலையில் வழங்க முடிவு !

நாட்டில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு ஏற்ப கொழும்பு துறைமுகத்தில் இன்று அரிசியின் முதல் தொகுதி வந்தடைய உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பந்துல கூறியதாவது, அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் வாயிலாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை மக்களுக்கு 100 ரூபாக்கு குறைவாக விநியோகிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்