சமையல் எரிவாயுவின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு !

சமையல் எரிவாயுவின் விலை பெரிய தொகையினால் உயர்த்தப்பட்டுள்ளது.லிற்றோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.


இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 2750 ரூபாவாகும்.இதுவரையில் 1493 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயுவின் விலை 503 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி புதிய விலை 1101 ரூபாவாகும். 2.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 520 ரூபாவாகும்.