கர்ப்பிணி தாய்மார்களுக்கான விசேட அறிவிப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணி பெண்கள் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட கர்பிணி பெண்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக ணனுமதிக்கப்பட முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி அவர் கூறியதாவது, ‘தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அனைத்து கர்ப்பிணி பெண்களையும் வைத்தியசாலையில் சேர்க்கவும், அவர்களுக்கான தகுந்த சிகிசஹாய் அளிக்கவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.மேலும் எங்களது வைத்தியசாலையில் அனைத்து விடயங்களும் தயாராக உள்ளது. வைத்தியசாலையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரையும் எங்களால் கவனித்து கொள்ள முடியும்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.