உங்க கையில் இந்த ரேகை இருக்கா? அப்போ இது உங்களுக்குத்தான் படிங்க

உங்கள் உள்ளங்கையை உற்று கவனித்தீர்கள் என்றால், உள்ளங்கைக்குள் பல்வேறு அடையாளங்களையும் அமைப்புகளையும் நீங்கள் காணலாம்.

சின்னங்களாகிய இந்த அடையாளங்கள் தான் உங்கள் உள்ளங்கை, விரல்கள் மற்றும் ஏற்றங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ரேகைகளின் மீது நேர்மறையான அல்லது எதிர்மறையான தடங்கல்கள் அல்லது அடைப்புகளை ஏற்படுத்தும்.

உள்ளங்கையில் உள்ள தோரணையைப் பொறுத்து தான் விளைவுகளும் அமையும்.

சூரிய ரேகையில் முக்கோண உருவாக்கம்

நன்றாக புரிந்து கொள்ள இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்; முக்கோண அடையாளம் உங்கள் சூரிய ரேகையின் மீது, அதாவது ஒருவரின் உள்ளங்கையின் நுனியில் இருந்து தொடங்கும் ரேகை புதன் மேட்டின் கீழ் உள்ளது. இந்த முக்கோண உருவாக்கம் ஒருவரின் நடுத்தர வயதில் ஏற்படக்கூடிய புகழை குறிக்கும்.

அந்த நபர் குறிப்பாக எந்த வயதில் புகழை அடைவார் என்பதை தெரிந்து கொள்ள, சூரிய ரேகையை ஒரு நபரின் ஆயுட்காலம் மற்றும் முக்கோணத்தின் தோரணையை கொண்டு வகுத்து கணக்கிடலாம். எந்த வயதில் அவர்கள் புகழை அடைவார்கள் என்பதையும் இது குறிக்கும்.

எதிர்மறையான சின்னங்கள் மற்றும் குணப்படுத்தும் அடையாளங்கள்

மறுபுறம், உள்ளங்கையில் எதிர்மறையான அடையாளங்கள் அல்லது சின்னங்கள் இருந்தால், அது ஒருவர் தன் வாழ்நாளில் சந்திக்கும் பேரதிர்ச்சி, பிரிவு, வலி, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இதர கஷ்டங்களைக் குறிக்கும்.

சில சின்னங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை, குணப்படுத்தும் காலத்தை மற்றும் உடல்நலம் தேறும் காலத்தையும் குறிக்கும். அதனால், கை ரேகைகளில் இந்த அடையாளங்கள் மற்றும் சின்னங்களுக்கான அர்த்தங்களைப் பற்றி மேலும் பார்க்கலாம்.

முறிவுகள் (Breaks)

உள்ளங்கையின் முக்கிய ரேகைகள் மற்றும் சிறிய ரேகைகளில் முறிவுகள் இருக்கக்கூடும். இந்த ரேகைகள் எங்கே இருக்கிறது மற்றும் இந்த முறிவுகள் எங்கே தோன்றுகிறது என்ற அடிப்படையில் தான் அவை நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றல்களை குறிக்கும்.

கட்டை விரலை நோக்கிய ரேகையில் இந்த முறிவு தென்பட்டால், ஒருவரின் தொழில் ரீதியான வாழ்க்கையில் புதிய திருப்பத்தை குறிக்கும். இந்த முறிவு மேல்நோக்கு திசையில், கையின் நுனியை நோக்கி இருந்தால், அது திட்டமிடாத மற்றும் எதிர்பாராத பயணத்தை குறிக்கும்.

சங்கிலிகள் (Chains)

ஒருவர் தன் உள்ளங்கையில் சங்கிலிகள் போன்ற அடையாளங்களைக் கொண்டிருந்தால், அவர்கள் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இது குறிக்கும்.

அவர்களின் குழந்தை பருவம் மிகவும் கடினமானதாக இருந்திருக்கும். சங்கிலி அடையாளங்கள் காதல் வாழ்க்கை அனுபவங்களையும் குறிக்கும். இந்த அடையாளங்கள் ஒரு நபரின் உடல்நல பிரச்சனைகள் மற்றும் முடிவெடுக்க முடியாத குணத்தையும் குறிக்கும்.

இந்த சங்கிலி அடையாளம் எந்தளவிற்கு நீளமாக உள்ளதோ அதற்கேற்ப பிரச்சனைகளும் நீடிக்கும்.

சிலுவை (Cross)

ஒரு நபரின் உள்ளங்கையில் காணப்படும் சிலுவை அவரின் விதியை கூறும். அதாவது ஒரு நபரின் நீண்ட காலமாக நீடிக்கக்கூடிய பிரச்சனைகளை அது குறிக்கும்.

ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய எழுச்சிகளின் உருவமைப்பாகவும் இது அமையும். மற்ற அனைத்து அடையாளங்களைப் போலவும், உள்ளங்கையில் அதன் தோரணையைப் பொருத்தே அது நேர்மறை அல்லது எதிர்மறை மாற்றத்தை ஒருவருக்கு அளிக்குமா என்பதை கூற முடியும்.-