மனைவியை டீசல் ஊற்றி எரித்த கொடூர கணவன்! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் மனைவியை டீசல் ஊற்றி கணவர் எரித்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவில் கடந்த 2- ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து தெரியவருவது, கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது கணவன் கடுமையாக கோபமடைந்ததால் டீசல் ஊற்றி எரித்துள்ளார்.

இச்சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலுதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் சந்தேகநபரான 28 வயதான கணவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.