பாடசாலைகள் திறக்கப்படும் திகதி வெளியானது !

வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இயங்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் (K.Thilipan ) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைவாக வடமாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளையும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திறப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.சுகாதார அறிவுறுத்தலுக்கமைய, சுகாதார நடைமுறைகளுடன் வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் 21 முதல் மீள இயங்கும்.

எனவே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர் ஏற்படுத்தி மாணவர்கள் சுகாதார வசதிகளுடன் கற்கக் கூடிய ஏற்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.