வீட்டில் மகிழ்ச்சியும், பணவரவும் அதிகரிக்கணுமா? அப்போ இந்த சிலைய வாங்கி வைத்தாலே போதும்!

வீடு தான் உங்களுடைய மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கக்கூடியது. அத்தகைய வீட்டை அமைதியும் சந்தோஷமும் நிரம்பியிருக்குமாறு வைத்துக்கொள்வது நம்முடைய கைகளில் தான் இருக்கிறது.

அதேபோல் நாம் எவ்வளவு முயன்றாலும் நம்முடைய வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் பாசிடிவ் எண்ணங்களை உருவாக்குகிற பொருட்களும் இருக்க வேண்டும். என்னென்ன மாதிரியான பொருட்களை வைத்திருந்தால் நம்முடைய வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் குடிகொள்ளும்?

புத்தர் தான் உலகில் அமைதியின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். அதனால் புத்தருடைய சிலை அல்லது ஓவியங்களை வீட்டினுடைய வடகிழக்குப் பகுதியில் வைத்திருத்தல் வேண்டும். இது உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, புதிய புதிய ஐடியாக்களையும் படைப்பாற்றலையும் உண்டாக்கும்.

மேலே விட்டங்களில் அழகுக்காகப் பல்வேறு டிசைன்களில், காற்றில் அசைந்து ஒலியெழுப்பும் சிம்மிகளைத் தொங்கவிடுவதுண்டு. இவை வெறும் அழகுக்கான பொருள் மட்டுமே அல்ல. அதிர்ஷடம் மற்றும் எதிர்காலத்துக்கு வழிகாட்டக்கூடிய ஒன்றும் கூட. இதை வீட்டில் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் தொங்கவிடுவது சிறப்பு.

டிரெஸ்ஸிங் டேபிள் பெரும்பாலும் பெட்ரூமில் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். அவை இல்லற வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை உண்டாக்கும். அதேசமயம் தென்மேற்கு பகுதியில் தெற்குப்புறமாக வைத்துவிடக்கூடாது. அது வீட்டில் நிறைய பிரச்னைகளை உண்டாக்கும்.

பொதுவாக உடற்பயிற்சி செய்வதற்கென நாம் வீட்டின் நடுப்பகுதி அல்லது மொட்டை மாடியைப் பயன்படுத்துவோம். சில சமயங்களில் நம்முடைய படுக்கையறைக்குள்ளே உடற்பயிற்சிகளைச் செய்துகொள்வதுண்டு.

அப்படி செய்யும்போது, வடகிழக்குப் பகுதியில் அமர்ந்து உடற்பயிற்சியோ தியானமும் செய்வது நல்லது. வடகிழக்கு பகுதி தான், ஆன்மீக சக்தி உலாவரும் இடமாகக் கருதப்படுகிறது.

இரண்டு வெள்ளைக் குதிரைகள் இருக்கிற சிற்பமோ அல்லது போஸ்ட்டர், ஓவியத்தையோ வீட்டின் வடமேற்குப் பகுதியில் வைத்திருந்தால் பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும்.