வியாழக்கிழமை காலையில் லட்டு தானம் செய்தால் நல்லதாம்! வாங்க என்னவென்று பார்ப்போம்

நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும் சிறப்பானவராகவும் கருதப்படும். ஒருவரின் ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால் அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி பெறுபவராக இருப்பார். அத்தகைய குருவுக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. ஆதலால் அந்த நாளில் எத்தகைய செயல்களைச் செய்யலாம்?

வியாழக்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும்.

விஷ்ணு பகவானை வணங்குவது மிக அவசியம். வியாழக்கிழமை காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்துவிட்டு, விளக்கேற்றி, விஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறப் பொருட்களை தானம் கொடுக்கலாம்.

சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டு படைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் பெருகும். லட்டு தானம் செய்வது அவசியம்.

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற இனிப்புப் பலகாரம் வாழைமரத்துக்கு முன் வைத்துப் படைத்து, மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்.

மற்ற தினங்களில் விரதங்கள் இருப்பதைவிடவும் வியாழக்கிழமையன்று விரதம் இருந்து, தானம் செய்தால் வீட்டில் செல்வம் நிலைபெற்றிருக்கும்.