அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமா? அமைச்சர்களுக்கான விசேட கூட்டம் இன்று

ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்று மாலை 05 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடைபெறும். இதில் சமையல் எரிவாயு, பால்மா மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.