நவராத்திரி பூஜை தொடர்பில் வவுனியா மக்களுக்கு விடுவிக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

நவராத்திரி பூஜைக்கு வவுனியாவில் உள்ள ஆலயங்களில் ஆலய குருக்கள் உட்பட மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாளை வியாழக்கிழமை (07) இந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றான நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு ஆலயங்களில் நவராத்திரி பூகைகளை மேற்கொள்ளும் ஆலய குருக்களுக்கும், உபயகாரார் குடும்பத்தில் இருவருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நவராத்திரி பூஜைகளை நடத்தவுள்ள ஆலய நிர்வாகத்தினர் சுகாதாரப் பிரிசோதகர்களிடம் அனுமதியை பெற்று அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய நவாரத்திரி நிகழ்வுகளை நடத்த வேண்டும் என சுகாதார பிரிவினர் இதன்போது தெரிவித்துள்ளார்.