யாழில் தெருநாய்களுக்கு உணவளிக்கும் இளைஞர்கள், குவியும் பாராட்டுக்கள்

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் சேர்ந்து செய்யும் மனிதாபிமான முயற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.அண்மையில் கோவிட் 19 காரணமாக இலங்கை முழுவதும் முடங்கியது.

hdrpl

பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, சந்தைகள், கடைதொகுதிகள், பூங்காக்கள் அனைத்தும் தற்போதும் மக்கள் வரத்தின்றி இருப்பதனால் அந்த பிரதேசங்களை அண்டி வாழும் ஆதரவற்ற நாய்களுக்கு உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

மனிதர்களுக்கே தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கும் இந்த காலப்பகுதியில் தெரு நாய்களுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்கள் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான உணவினை சமைத்து அவற்றை ஆதரவற்ற தெருநாய்களுக்காக தொடர்ந்து பகிர்ந்தளித்து வருகின்றனர்.

இன்னும் அதிகமாக சேவையாற்ற தன்னார்வலர்களாக இணைந்து சேவை செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், யுவதிகளை வரவேற்கின்றனர்.

இவர்களது செயற்பாடுகளை பார்வையிடவும் தொடர்பு கொள்ளவும் We Feeders என்ற முகப்புத்தக பக்கத்தினை லைக் செய்யுங்கள். facebook.com/weFeeders

மிருகங்களுக்காக உணவளிக்கும் உன்னத பணியை விட மருத்துவ சேவை, தெரு நாய்களுக்காக Re home (ஆதரவளிக்க தயாராகவுள்ள வீடுகளில் சேர்ப்பித்தல்) போன்றவற்றினையும் செய்து வருகின்றனர்.

மனிதனுக்கு மனிதனே உதவ தயங்கும் இந்த உலகத்தில் வாயில்லா ஜீவன்களுக்காக உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள இவர்களது சேவை நம் தேசம் மிகப்பெரிய வரவேற்பளிக்க வேண்டிய விடையமாகும்.

இப்படியான இளைஞர்களுக்கு பாரிய ஆதரவளிக்க வேண்டியது உயிர்களை நேசிக்கும் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

இவர்களை பாராட்ட நினைத்தால் We Feeders முகப்புத்தக பக்கத்தை லைக் செய்யுங்கள்.

உங்களால் முடிந்த வரை இந்த தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் Share செய்யுங்கள்.